தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NHDA)

அறிமுகம்

எழுபதாவது தசாப்தத்தின் இறுதிப்பகுதியில் இலங்கையில் வீடமைப்புப் பிரச்சினை மிகவும் உக்கிர நிலையை அடைந்திருந்தது. அப்போது காணப்பட்ட அரசாங்கத்தின் பிரதான நிகழ்ச்சித்திட்டமென்றாக ஒரு இலட்சம் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனுடனும், துரிதமாகவும் வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு பலம்வாய்ந்ததொரு நிறுவனம் அவசியப்பட்டது. அதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1979 இன் 17 ஆம் இலக்க வீடமைபபு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது. தற்போது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 25 மாவட்ட அலுவலகங்களைத் தாபித்துள்ளதுடன், கொழும்பு நகரில் பிரதான அலுவலகமும், மேலும் 02 அலுவலகங்களும் தாபிக்கப்பட்டுள்ளன.

நோக்கு

இலங்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை வசதிகளைக் கொண்ட பாதுகாப்பான ஒரு வீட்டை உரித்தாக்கிக் கொடுத்தல்.

செயற்பணி

இலங்கை மக்களின் விசேடமாக ஒரு வீட்டை உரித்தாக்கிக் கொள்வதற்கான வழியற்ற குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களின் வீடமைப்புத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தேசிய ரீதியில் ஊக்குவித்தல், இடவசதிகளைச் செய்துகொடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல், அதன் மூலம் அவர்களின் சமூக நிலைத்திருத்தலை நல்லதாக மாற்றியமைத்தல் மற்றும் பொருளாதார சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

நோக்கங்கள்

  • தொடர்மாடி வீடுகள், வீடுகள் அல்லது வேறு வாசஸ்தளங்கள் அல்லது கட்டிடங்களை நிர்மாணிப்பதில் நேரடியாக ஈடுபடுதல்.
  • வீட்டுப் பற்றாக்குறையை குறைப்பதற்காக வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை தாபிக்க திட்டங்களை தயார் செய்தல்.
  • சோிகள் மற்றும் குடிசைகளைக் கொண்டுள்ள பிரதேசங்களிலிருந்து மேற்படி சோிகள் மற்றும் குடிசைகளை அகற்றும் மற்றும் அப்பிரதேசங்களை மீள் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • வீடமைப்பு அபிவிருத்திக்கு ஊக்குவித்தல்.
  • அதிகாரசபையின் நோக்கங்களில் ஏதேனுமொன்றை அமுல்படுத்துவதற்காக, காணிகளை அபிவிருத்தி செய்தல் அல்லது மீள் அபிவிருத்தி செய்தல்.
  • வீடமைப்பு அபிவிருத்திக்கு யாராயினும் ஆளொருவருக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
  • அதிகாரசபையின் நோக்கங்களில் ஏதேனுமொன்றுக்கு சமமான ஏதும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற ஆளொருவருக்கு நிதி அல்லது வேறு வசதிகளைச் செய்துகொடுத்தல்.
  • வீடமைப்பு அபிவிருத்தியின் சகல துறைகளுக்கும் ஏற்புடையதான செயற்பாடுகளில் ஈடுபடுதல். அவற்றுக்கு ஊக்கமளித்தல் மற்றும் அச்செயற்பாடுகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.

மேலுள்ள நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அதில் ஏதேனுமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவைப்படக்கூடிய அல்லது ஈடுபடக்கூடிய வேறு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.

 

சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டம்

முகவரி

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை
 சோ் சித்தப்பளம் ஏ கார்டினர் மாவத்தை,
த.பெ. 1826, கொழும்பு 02
.இலங்கை
 (94)-11-2431932, 2431722,  2431707, 2421748
 (94)-11-2449622
 info@nhda.lk
  http://www.nhda.lk

Social Chanel –

www.facebook.com/profile.php?id=100010220472530www.faceboo.com/
twitter.com/nhdaweb
www.intergram.com/
www.youtuebe.com /channel/UCRojEcGr2Nf2yFgTJLyEZXA/videos?view=0&shelf_id=0&sort=dd

 

Location Map

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *