ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், சுகாதார மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நகர குடியிருப்புகள் அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து உருவாக்கிய ‘சுவென் சிட்டிமு
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், சுகாதார மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நகர குடியிருப்புகள் அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து உருவாக்கிய ‘சுவென் சிட்டிமு – லஸ்ஸன வெமு’ மற்றும் ‘சுவதி தியனிய’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா செத்சிறிபாய கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
நகர குடியிருப்புகளில் உள்ள 200 குழந்தைகளுக்கு சுகாதார உபகரணப் பெட்டிகளும் வழங்கப்பட்டன. 10 கட்டங்களின் கீழ் 3,000 சிறார்களுக்கு இந்தக் கருவிகள் வழங்கப்பட உள்ளதுடன், இதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வழங்கிய தொகை 5.7 மில்லியன் ரூபாவாகும். நுகரப்புற குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் சுகாதார தரத்தை மேம்படுத்தவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நகர குறைந்த வருமானம் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிரந்தரப் பிரதிநிதி டக்கஹோ ஃபுகாமி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்தா, சுகாதார அமைச்சின் தோட்டப்புற மற்றும் நகர துறையின் விசேட நிபுணர் டொக்டர் உபுலி பெரேரா, சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் அஷாந்தி பலபிட்டிய. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க, பணிப்பாளர் நாயகம் விஜயானந்த ஹேரத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.