அமைச்சின் கீழுள்ள பிரதான விடயத்துறைகள்

அமைச்சின் முக்கிய நோக்கங்கள்
வீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு
 • வீடமைப்பு விடயம் தொடர்பிலான கொள்கைகள், சட்டங்கள், ஒழுங்குவிதிகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை ஆக்குதல், பின்னாய்வு மற்றும் மதிப்பீடு.
 • குறைந்த வருமானம் பெறுவோர், நடுத்தர வருமானம் பெறுவோர் மற்றும் விசேட சமுதாயக் குழுக்கள் உள்ளிட்ட மக்களின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்பு நிதி உதவி மற்றும் கடன் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.
 • வீடமைப்பு அபிவிருத்தித் தேவைகளுக்கு காணிகளை இனங்காணல், காணிகொள்ளல், சாட்டுதல் செய்துகொள்ளல், நீக்கம் செய்தல் மற்றும் உறுதிகளை வழங்குவது தொடர்பிலான நடவடிக்கைகள்
தொழில்நுட்பப் பிரிவு
 • நிர்மாண விடயம் தொடர்பிலான கொள்கைகள், சட்டங்களை ஆக்குவதும், பின்னாய்வு செய்வதும்.
 • நிர்மாணக் கைத்தொழிலைப் பேணிவரத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தல்.
 • அமைச்சின் கீழுள்ள அரசாங்க திணைக்களங்கள், நிர்மாணிப்பு தொடர்பிலான அதிகார அமைப்புக்களின் நடவடிக்கைகளை ஒழுங்குறுத்தல் மற்றும் வழிகாட்டல்.
 • அரசின் சகல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கும் நிலையான தொழில்நுட்பக் குழுக்களின் பணிகளை நிறைவேற்றல்.
நிர்மாணப் பிரிவு
 • அமைச்சின் கீழுள்ள நிர்மாணத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் முன்னேற்றத்தை ஒழுங்குறுத்தல்.
 • அமைச்சின் கீழுள்ள தொழில்நுட்பம்சாரா நிறுவனங்களுக்கு நிர்மாணப் பணிகளின் போது தொழில்நுட்ப வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்தல்.
 • நிர்மாணத் துறை தொடர்பான வெளிநாட்டு தொழில்வல்லுனர்கள் மற்றும் பயிலுனர்களான தொழில் வல்லுனர்களுக்கு விசாவை சிபாரிசு செய்தல்.
இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் பிரிவு
 • இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு கிராமிய வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல் மற்றும் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
 • நிலக் கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக அமுல்படுத்தல்.