பிரதான பிரிவுகள்

 1. நிருவாகப் பிரிவு

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் பொது நிருவாகம் சம்பந்தமான சகல பணிகள் மற்றும் மனிதவள முகாமைத்துவம் பிரதான பணியாகும் என்பதுடன் அதற்குத் தேவையான சூலலை ஒழுங்குபடுத்துவது பௌதீக வளங்களின் விளைத்திறன்மிக்க முகாமைத்துவமாகும். மேலும் அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் சகல தாபன நடவடிக்கைகள் மற்றும் மனிதவள முகாமைத்துவம் மற்றும் மேற்படி நடவடிக்கைகளுக்கு உதவுவது நிருவாகப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

நிருவாக பிரிவின் பிரதான பணிகள்

 • அமைச்சின் சகல பொது நிருவாக நடவடிக்கைகள் மற்றும் சகல அலுவலர்களினதும் தாபன மற்றும் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • அமைச்சரின் பதவியணி அலுவலர்களின் தாபன மற்றும் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் அமைச்சின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்படுகின்ற சகல தாபன மற்றும் நிருவாக நடவடிக்கைகளும்.
 • அமைச்சின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் நி.பி. 135 இன் கீழ் நிருவாகப் பிரிவு அலுவலர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • நிருவாகப் பிரிவு தொடர்பான அமைச்சரவை விஞ்ஞாபனங்களைத் தயார் செய்து சமர்ப்பித்தல் மற்றும் அமைச்சர் அலுவலகம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை செய்தல்.
 • பாராளுமன்றம் தொடர்பிலான உரிய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.
 • மனிதவள அபிவிருத்தி தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அலுவலர்களை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.
 • அமைச்சின் இணை நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள், செயலாற்றுகை அறிக்கைகள் பற்றிய ஒருங்கிணைப்பும், கண்காணிப்பும்.
 • கூட்டங்கள் மற்றும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல்.
 • அமைச்சின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான முறையியலை மேம்படுத்துவதை ஒருங்கிணைப்புச் செய்யும் நடவடிக்கைகள்.
 • நிலையான சொத்து முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

     2. திட்டமிடல் பிரிவு

அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடல் மற்றும் திட்டமிடப்பட்டவாறு முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு வழிநடாத்துவது இப்பிரிவின் பிரதான செயற்பணியாகும். வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டுத் துறையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றிய சரியான தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் உரிய தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்துவதும் இதில் உள்ளடங்கும். மேலும், வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறையின் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு நிறுவனங்களினால் தயார் செய்யப்படுகின்ற கருத்திட்டப் பிரேரணைகளை நிதி அமைச்சினூடாக அங்கீகரித்துக்கொள்ள உதவுவதும், அமுல்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை பின்னாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்வதும் திட்டமிடல் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

திட்டமிடல் பிரிவின் பிரதான பணிகள்

 • அமைச்சின் நோக்கு மற்றும் நோக்கங்களுக்கு ஏற்புடையதாக அமைச்சு மற்றும் அதன் கீழ் இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் செயல் ரீதியான திட்டத்தைத் தயார் செய்வது தொடர்பில் உரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்.
 • அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் கருத்திட்டப் பிரேரணைகளை, தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் சமர்ப்பிப்பதும், ஒருங்கிணைப்புச் செய்வதும்.
 • அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சம்பந்தமான தகவல்களைத் தயார் செய்வதும், அறிக்கையிடுவதும்.
 • கருத்திட்டங்களை பின்னாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
 • அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை மாதாந்த மற்றும் வருடாந்த செயற்றிட்டத்திற்கமைய மதிப்பீடு செய்தல்.
 • அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் சம்பந்தமான அமைச்சரவை தீர்மானங்களை அமுல்படுத்துவது பற்றிய பின்னாய்வை மேற்கொள்ளல்.
 • அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை, செயலாற்றுகை அறிக்கையைத் தயார் செய்தல்.
 • முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.
 • வெளிநாட்டு உதவியின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களை உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்.

     3. வீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு

     3.1 வீடமைப்புப் பிரிவு
வீடமைப்புத் துறையின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வீடமைப்பு அபிவிருத்தி துறையின் கீழ் தேசிய கொள்கைகளைத் திட்டமிடல், திட்டங்களைத் தயார் செய்தல், வழிநடாத்தல், பின்னாய்வு, மற்றும் அத்துறையில் ஈடுபட்டுள்ள அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழிகாட்டல் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

வீடமைப்புப் பிரிவின் பிரதான பணிகள்
       1. கொள்கைகளை வகுத்தல்

 • வீடமைப்புத் துறையின் முன்னேற்றத்துக்குத் தேவையான கொள்கைகளைத் தயார் செய்தல்.
 • வீடமைப்புத் துறை சம்பந்தமான அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் மற்றும் குறிப்புக்களைத் தயார் செய்தல்
 • வீடமைப்புத் துறை சம்பந்தமான சட்டங்களைத் திருத்தியமைத்தல் மற்றும் ஒழுங்குவிதிகளை ஆக்குதல்.
 • வீடமைப்புத் துறைக்கு ஏற்புடையதான கொள்கைகளை ஏனைய அரசதுறை நிறுவனங்களுடன் இணைந்து அமுல்படுத்தல்.
 • வேறு அமைச்சுக்களினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்கு வீடமைப்புத்துறை தொடர்பான அவதானிப்புக்களை தயார் செய்து சமர்ப்பித்தல்.
 • கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் கௌரச அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படுகின்ற பாராளுமன்ற வினாக்களுக்கான விடைகள் மற்றும் அவதானிப்புக்களை தயார் செய்து சமர்ப்பித்தல்.

      2. வீடமைப்பு அபிவிருத்தி

 • குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நாடளாவிய ரீதியில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தல்.
 • நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ‘சபிரி தொடர்மாடி வீடமைப்புத்திட்டம்’, ‘சியபத்த’ வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்’ மற்றும் பிரதானமாக அரச தனியார் பங்குடைமை முறையியலின் கீழ் தொடர்மாடி வீடமைப்புத்திட்டங்களை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.
 • வசிப்பதற்கு உகந்த வீடொன்று இல்லாத சங்கைக்குரிய பிக்குமாரின் பெற்றோர் குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் “மிகிந்து நிவஹன” நிகழ்ச்சித்திட்டம்.
 • வீடு இல்லாத பிரதானமாக வாடகை அடிப்படையில் வாழ்ந்துவரும் மகளுக்கு சொந்துரு தொடர்மாடி வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தல்.
 • பங்கேற்பு முறையியல் வீடமைப்புக் கடன் கூ உதவி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.
 • தொடர்மாடி வீடுகளை புனரமைத்தல் மற்றும் மீள் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள்.
 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் வீடமைப்புக் கருத்திட்டங்களை அமுல்படுத்தவது தொடர்பான நடவடிக்கைகள்.
 • வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.
 •  பொது மக்களிடமிருந்து கிடைக்கின்ற வீடமைப்புக் கோரிக்கைகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

      3.  வேறு கடமைகள் 

 • உலகக் குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் வீடமைப்பு, நிர்மாணிப்பு சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதும், உலகக் குடியிருப்புத் தினத்தைக் கொண்டாடுவதும்.
 • ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் (UN-Habitat) இணைந்து மேற்கொள்ளும் ஏனைய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் தகவல் அறிக்கைகளை தயார் செய்து சமர்ப்பித்தல்.

      3.2 காணிகள் பிரிவு

வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான காணிகளை இனங்காணல், உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு காணிகளை கொள்ளல் மற்றும் நீக்கம் செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தல், காணி விடயம் தொடர்பில் சமர்ப்பிக்கப்படுகின்ற சிக்கல்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களுக்குத் தேவையான காணிகளை கொள்ளல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.

1979 இன் 17 ஆம் இலக்க தேசி வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 8(1) பிரிவுக்கு அமைய அதிகாரசபை வசமுள்ள யாதாயினுமொரு காணி, தொடர்மாடி வீடு, வீடு அல்லது Nவுறு வாசஸ்தலத்தை நீக்கம் செய்வதற்கு கௌரவ அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். அதன் கீழ், நிதி செலுத்தி முடிக்கப்பட்டுள்ள வீடு கூ காணி உரிமையாளர்களுக்கு உறுதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கௌரவ அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தயார் செய்து அனுப்பும் ஆவணங்களுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொண்டு மீண்டும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

காணிகள் பிரிவின் பிரதான பணிகள்

 • வீடமைப்பு அபிவிருத்தி தேவைகளுக்கு காணிகளைச் சுவீகரித்தல்ஃ பொறுப்பேற்றுக் கொள்வது சம்பந்தமான நடவடிக்கைகள்.
 • வீடமைப்பு அபிவிருத்தித் தேவைகளுக்கு காணிகளை நீக்கம் செய்வது சம்பந்தமான நடவடிக்கைகள்
 • தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 8(1) பிரிவின் கீழ் காணிகள்ஃ வீடுகளுக்கான சட்ட ரீதியான உரித்தினை பொதுமக்களுக்கு சாட்டுதல் செய்தல்.
 • கட்டிடத் திணைக்களம், அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம், வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட் கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய இயந்திரசாதனங்கள் நிறுவகம் ஆகிய நிறுவனங்களுக்குத் தேவையான காணிகளை கொள்ளல் பற்றிய நடவடிக்கைகள்.

நடுத்தர வருமான வீடமைப்புக் கருத்திட்ட அலகு

நகர மற்றும் உப நகர்ப் பிரதேசங்களில் வாழும் நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நகர மற்றும் உப நகர்ப் பிரதேசங்களைச் சூழ நிவாரண விலைக்கு நடுத்தர வருமானம் பெறுவோருக்காக சகல வசதிகளையும் கொண்ட தொடர்மாடி வீடுகள் நியாயமான விலைக்குப் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் போது முதலீடு, திட்டமிடல், நிர்மாணிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஆகிய பணிகள் தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படுவதுடன், அரசாங்கம் வீடமைப்புக் கருத்திட்டத்திற்கான பிரவேசம் வரை நீர், மின்சாரம், வீதி வசதிகளை பெற்றுக் கொடுப்பதும், வீடமைப்புக் கருத்திட்டத்தினை நிர்மாணிக்கும் காணியின் அபிவிருததி விலையை மாத்திரம் அறவிட்டுக் கொண்டு கருத்திட்டத்திற்கு காணிகளைப் பெற்றுக் கொடுப்பதும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்காக நடுத்தர வருமான கருத்திட்டப் பிரிவு என்ற பெயரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிடப் பொருட் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சில் தாபிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ பிரிவின் பணியாகும்.

      3.3. தேசிய வீடமைப்பு ஆணையாளர் பிரிவு
இந்தப் பிரிவு 1973 இன் 01 ஆம் இலக்க வீடமைப்பு ஆதன உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பணிகளை நிறைவேற்றுகின்றது. அவ்வாறே, 1972 இன் 7 ஆம் இலக்க வாடகைச் சட்டத்தின் கீழ் பொறுப்பளிக்கப்பட்டுள்ள சில பணிகளையும் நிறைவேற்றி வருகின்றது.

தேசிய வீடமைப்பு ஆணையாளர் பிரிவின் பிரதான பணிகள்

 • வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு உறுதிகளைப் பெற்றுக்கொடுத்தல்.
 • அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்தல்.
 • பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் எழுகின்ற சிக்கல்களைத் தீர்த்துவைத்தல்.

     4.தொழில்நுட்பப் பிரிவு

அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, கட்டிடத் திணைக்களம், அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்கள் இப்பிரிவினால் வழங்கப்படுகின்றன. அதற்கமைய, சகல நிறுவனங்கள் தொடர்பிலும் தனித்தனியாக நடாத்தப்படுகின்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் அமைச்சில் நடாத்தப்படுகின்றது.
பிரதானமாக இந்த அமைச்சு நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு, தரமான மற்றும் சுற்றாடலுக்கு சாதகமான நிர்மாணக் கைத்தொழிலை உருவாக்குவதற்குள்ள நிறுவனங்களை வழிநடாத்த செயற்படுகின்றது. இதற்கு பிரதானமாக தலையீடு செய்வது தொழில்நுட்பப் பிரிவாகும்.

தொழில்நுட்பப் பிரிவின் பிரதான பணிகள்;

 • நிர்மாணத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல்.
 • நிர்மாணத் துறை சம்பந்தமான சட்டவரைவுகள், சட்டங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள்
 • தொழில்நுட்பத் துறையுடன் சம்பந்தப்பட்ட நிர்மாணக் கைத்தொழிலை ஒழுங்குறுத்தல் மற்றும் நிர்மாணக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கு வழிநடாத்தல்.
 • நிர்மாணத் துறைக்குத் தேவையான ஊழியப்படையணியை ஆயத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • தொழில்வல்லுனர்கள் மற்றும் நிர்மாணக் கலைஞர்களை நிபுணத்துவம் மற்றும் அறிவுமிக்கவர்களாக்குவதற்கு மற்றும் தரமான நிர்மாணிப்பை மேற்கொள்வதற்கு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை வழிப்படுத்தல்.
 • தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவை விஞ்ஞாபனங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

     5. நிர்மாணப் பிரிவு

2019.05.29 ஆம் திகதி மேலதிக செயலாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டதை அடுது;து நிர்மாணப் பிரிவு தாபிக்கப்பட்டது. பிரதானமாக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம், தேசிய இயந்திரசாதன நிறுவனம், வரை. கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப் பணிகளை அமைச்சு மட்டத்தில் ஒருங்கிணைப்புச் செய்வது, மேலதிக செயலாளர் நிர்மாணப் பிரிவு இந்த அமைச்சில் தாபிக்கப்பட்டதை அடுத்து பொறுப்பளிக்கப்பட்ட பிரதான செயற்பணியாகும்.

நிர்மாணப் பிரிவின் பிரதான பணிகள்

 • உரிய நிறுவனங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்.
 • உரிய நிறுவனங்களின் நிதிச் சிக்கல்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல்.
 •  நிர்மாணத் துறையில் கண்காணிப்புச் செய்தல் மற்றும் மதியுரைச் சேவைகளை ஆற்றுதல்.
 •  பெறுகை மற்றும் ஒப்பந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல்.
 • அமைச்சரவை விஞ்ஞாபனங்களைத் தயார் செய்தல் மற்றும் அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்கு அவதானிப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல்.
 • நிபுணத்துவம்மிக்க இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெளிநாட்டு நிர்மாணத் துறையைச் சேர்ந்த விசேட நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள ஆட்களுக்கு விசா பெற்றுக் கொள்வதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு சிபாரிசுகளைச் சமர்ப்பித்தல்.

      6. பொறியியல் சேவைகள் பிரிவு

2021.07.01 ஆம் திகதி பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து பணிப்பாளர் நாயகம் பொறியியல் சேவைகள் பிரிவு தாபிக்கப்பட்டது. பிரதானமாக அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திரசாதன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப் பணிகள் மற்றும் இயந்திரசாதன சேவைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் ஒருங்கிணைப்புச் செய்வது இப்பிரிவின் பிரதான செயற்பணியாகும்.

பொறியியல் சேவைகள் பிரிவின் பிரதான பணிகள்

 •  உரிய நிறுவனங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்.
 • உரிய நிறுவனங்களின் நிதிச் சிக்கல்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளல்.
 •  நிர்மாணிப்பு மற்றும் இயந்திரசாதன சேவைகளை ஆற்றுவது தொடர்பில் கண்காணிப்புச் செய்தல் மற்றும் மதியுரைச் சேவைகளை ஆற்றுதல்.
 • ஊழியர்களின் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதை ஆராய்ந்துபார்த்தல்.
 • அமைச்சரவை விஞ்ஞாபனங்களைத் தயார் செய்தல் மற்றும் அவதானிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

       7. நிதிப் பிரிவு
அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களுக்கு ஏற்புடையதாகின்ற நோக்கங்களை அடைந்துகொள்ளத் தேவையான நிதி வளம் மற்றும் ஆலோசனையைப் பெற்றுக்கொடுத்தல், மேற்படி வளங்களைப் பயன்மிக்கவாறும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி ஆலோசனை வழங்குதல் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

நிதிப் பிரிவின் பிரதான பணிகள்

 • வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்க நிதி முகாமைத்துவ முறைமையை அமைச்சினுள் அமுல்படுத்தல்.
 • அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கான பெறுகை குழுக்களைத் தாபித்தல்.
 • நிதி முகாமைத்துவம், நிதித் திட்டமிடல், வரவு செலவுத்திட்டமிடல், சொத்து முகாமைத்துவம் மற்றும் கொள்வனவு, முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு அறிவுரை மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்தல்.
 • நிதி அமைச்சுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளைப் பேணிவருதல் மற்றும் அமைச்சின் நோக்கங்களை அடைந்துகொள்ளக்கூடியவாறான நிதி வளங்களை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொண்டு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளித்தல்.
 • அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு அமைச்சின் நோக்கங்களை அடைந்துகொள்வதை பிரதானமாகக் கொண்டு அந்நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயார் செய்தல் மற்றும் ஆண்டு முழுவதிலும் வரவு செலவுத்திட்டக் கட்டுப்பாட்டுடன் நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • வருடாந்த ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை செலவிடும் போது உரியவாறு அறிக்கையிடல் மற்றும் மாதாந்த, வருடாந்த நிதி அறிக்கைகளை உரிய நிறுவனங்களிடம் சமர்ப்பித்தல்.
 • அரச கணக்காய்வுப் பிரிவு மற்றம் உள்ளக கணக்காய்வுப் பிரிவுடன் நல்லதொரு தொடர்பை; பேணிவருவதுடன் மேற்படி பிரிவுகளின் ஊடாக பிரேரிக்கப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை அமுல்படுத்தல்.
 • அமைச்சின் சகல பெறுகை நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ளல்.

      8. உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ளகூஇணை நிறுவனங்களின் உத்தேச நோக்கங்களை யதார்த்தமாக மாற்றியமைத்துக் கொள்வதற்கான சிறந்த நிதி நிருவாகம் மற்றும் முறையான முகாமைத்துவத்தை தாபிக்கச் செயற்படல்.
அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் நிதி நிருவாகம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளில் பங்கேற்று அந்நடவடிக்கைகளை மென்மேலும் முறையாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கு முகாமைத்துவத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் உதவுதல்.

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் பிரதான பணிகள்

 • அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் பின்னாய்வு செய்தல்.
 • கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்களின் மூலம் அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் சிக்கல்களை குறைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • கணக்காய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளின் மூலம் நிறுவனங்களிலுள்ள சிக்கல்களை குறைத்துக் கொள்ள உதவுதல்.
 • அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் அரச கணக்குகள் பற்றிய குழுவின் சிபாரிசுகள் மற்றும் கட்டளைகளை அமுல்படுத்துவது தொடர்பில் பின்னாய்வை மேற்கொள்ளல்.

       9. மீள்குடியேற்றப் பிரிவு
மீளக் குடியேற்றப் பிரிவு 2020.08.09 ஆம் திகதிய 2187கூ27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய இவ் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. மீள்குடியேற்றப் பிரிவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களை மீளக் குடியேற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஒழுங்கு செய்வதும், ஒருங்கிணைப்புச் செய்வதும் மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கமைய, இப்பிரிவினால் 2021 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் 2666 குடும்பங்களுக்கு உரித்தான ஆட்கள் 7337 பேரும், கிழக்கு மாகாணத்தில் 19 குடும்பங்களுக்கு உரித்தான ஆட்கள் 54 பேரும் சொந்தக் கிராமங்களில் அல்லது மாற்று இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய 2021 ஆம் ஆண்டு 2685 குடும்பங்களுக்கு உரித்தான ஆட்கள் 7391 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கு மேலதிகமாக 2909 குடும்பங்களுக்கு உரித்தான ஆட்கள் 8767 பேர் மீள் குடியமர்த்தப்படவுள்ளார்கள். இதற்கு மேலதிகமாக மோதல் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களில் மீண்டும் இலங்கைக்கு வருகைதந்துள்ள குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் போது அவர்களுக்குத் தேவையான வீடுகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

அத்துடன் இப்பிரிவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் இலங்கை இராணுவம் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து (மைன் அட்வைசரி குரூப் நிறுவனம், ஹலொ டிரஸ்ட் நிறுவனம், டெல்வோன் எசிஸ்ரன்ஸ் பொ சோசல் ஹார்மனி நிறுவனம், ஸ்கவிதா ஹியுமனிரேரியன் எசிஸ்ரன்ஸ் என்ட் ரீலயிவ் புரொஜெக்ட் நிறுவனம்) மேற்கொள்ளப்பட்டு காணிகளை மீண்டும் மக்களிடம் கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளும் நிறைவேற்றப்படுகின்றன.

2021 ஆம் ஆண்டில் 4.3 சதுர கி.மீ. அளவான நிலப் பிரதேசம் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேலும் 13.5 சதுர கி.மீ. அளவான நிலப்பகுதிகள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு எஞ்சியுள்ளன.

மோதல் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களில் குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு முன்பூர்த்தி செய்யப்பட்ட கொன்க்றீட் பெனல் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூ.மி. 400 ஆன ஏற்பாடுகள் 300 வீட்டு அலகுகளுக்காக 2021 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 150 வீட்டு அலகுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வீடுகளும், அம்பாறை மாவட்டத்தில் 50 வீடுகளுமாக இக்கருத்திட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இவற்றில் பெரும்பாலான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 12 வீடுகளின் நிர்மாணப் பணிகளை 2021 ஆம் ஆண்டில் நிறைவு செய்துகொள்ள முடிந்தது. இதற்காக 2020 ஆம் ஆண்டில் ரூ.மி. 72.80 உம் மற்றும் 2021 ஆம் ஆண்டில் ரூ.மி. 2.87 உமாக ரூ.மி. 75.67 ஆன தொகை செலவிடப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப் பிரிவின் பிரதான பணிகள்

 • வடக்கு கிழக்கில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல்.
 • மோதல் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் காணி உரித்தற்ற குடும்பங்களுக்கு அரச உதவியின் கீழ் காணிகளைக் கொள்வனவு செய்து நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுது;தல்.
 • இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
  • குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
  • வீட்டு மின் இணைப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல்.
  • பாதிக்கப்பட்ட வீடுகளை புதுப்பித்தல்.
  • துப்பரவேட்பாட்டு வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
  • இடம்பெயந்த குடும்பங்கள் வாழும் பிரதேசங்களில் உள்ளக பிரவேச வீதிகளை நிர்மாணித்தல்.
  • பாதிக்கப்பட்ட பாடசாலை கட்டிடங்கள் மற்றும் பாலர் பாடசாலை மற்றும் சுகாதார நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல்.
 • நிலக்கண்ணிவெடி மற்றும் வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கைகளை சர்வதேச தரநியமங்களுக்கு அமைய வழிப்படுத்துவதும் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு காணிகளை விடுவிப்பதும்.
 • மீள்குடியேற்றப் பணிகளுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புக்களை ஒருங்கிணைப்புச் செய்தல்.
 • இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.