அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம

 

 

அறிமுகம்

அரசாங்க வேலைகள் திணைக்களத்தின் உப திணைக்களமொன்றாக 1849 ஆம் ஆண்டு கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியதில் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம் பிற்காலத்தில் அதாவது 1928 ஆம் ஆண்டு முதல் கொலன்னாவை தெமட்டகொட வீதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்திற்கு அருகே தாபிக்கப்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் பெருந்தெருக்கள், பாலம், நீர்ப்பாசனம், கட்டிடம் நிர்மாணித்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளதுடன், வெளிநாட்டுப் பொறியியலாளர்களினால் இந்த நிறுவனம் வழிநடாத்தப்பட்டுள்ளது. 

1969 வரை இவ்வாறு இயங்கி வந்த அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம் அதன் மூலம் நிறைவேற்றியுள்ள பெருந்தெருக்களை நிர்மாணித்தல், பராமரிப்பு, கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்பு போன்ற சிவில் பொறியியல்சார் பணிகளுக்கு  பெருந்தெருக்கள் திணைக்களம் மற்றும் கட்டிடங்கள் திணைக்களமும் தாபிக்கப்பட்டன. இதனை அடுத்து எஞ:சிய  இயந்திரப் பொறியியல்சார் பணிகளை நிறைவேற்றுவதற்காக 1971.01.10 ஆம் திகதி முதல் அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம் ‘ஏ’ தரத்தைச் சேர்ந்த திணைக்களமொன்றாக மாற்றியமைக்கப்பட்டது.

பல்வேறு அரச நிறுவனங்களை வழிநடாத்துவதற்குத் தேவையான இயந்திரப் பொறியியல்சார் உதவிச் சேவைகளை வழங்குவதற்கு அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம் பொதுத் திறைசேரியின் முற்பணக் கணக்கு முறையின் கீழ் காணிகள் மற்றும் காணிகள் அபிவிருத்தி அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சு மற்றும் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் அமைச்சின் கீழ் தொடர்ச்சியாக இயங்கிவந்துள்ளது.

 

நோக்கு

வெளி மற்றும் உள்ளக வாடிக்கையாளர் சேவைகளை பூகோளப் போக்குகளுக்குப் பொருத்தமானவாறு தரமானதாக உயர் தரங்களுக்கு மேம்படுத்தல்.

செயற்பணி

இயந்திரசாதன பொறியியல் துறையின் வேலைகள், உற்பத்தி, மதியுரைச் சேவைகள் மற்றும் பட்ட படிப்பு மாணவர்களான பயிலுனர்கள், இயந்திரப் பொறியியலாளர்களுக்கு தொழில்சாலை வேலைத்தள உற்பத்திகள், சேவைகள் மற்றும் வேலைகள் தொடர்பிலான செயன்முறைப் பயிற்சியைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற வேலைகள் மற்றும் சேவைகளை ஆற்றுதல்.

அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பிரதான உற்பத்திப் பணிகளும் வழங்கப்படுகின்ற சேவைகளும்

 • மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள், கருவிகளை உற்பத்தி செய்தல்.
 • நீர் முகாமைத்துவத்திற்கான காய்ச்சி உருக்கும் இரும்பு சம்பந்தமான உற்பத்திகள், உள்வாங்கும் கதவுகள், அணைக்கட்டுக் கதவுகள் போன்ற பலதரப்பட்ட கதவு வகைகள்.
 • காய்ச்சி உருக்கும் இரும்பு சம்பந்தமான உற்பத்திகள் (ஆட்குழி நிர்மாணிப்பும் அவற்றுக்கான மூடிகளும் நீர் முகாமைத்துவ உபகரணங்கள்).
 • தளபாடம் மற்றும் ஏனைய மர உற்பத்திகள்
 • வீதித் தடைகள் மற்றும் வீதிச் சமிக்ஞைப் பலகைகள்
 • இயந்திர சாதன சைரன்கள், ஆண்டு, மாதம் மற்றும் நாட்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய தபால் முத்திரைகள்.
 • ஸ்கிறீன் அச்சு, டிஜிட்டல் அச்சு, அறிவித்தல் பலகைகள், மர அலங்கார வேலைகள், மற்றும் அது சம்பந்தமான தேவைகள் எம்போஸ் வேலைகள்
 • பவுடர் கோடிங் மற்றும் இயந்திர சாதனங்களுக்கான வர்ணம் பூசும் வேலைகள்
 • சகல வகையிலுமான பாட்டிஷன்கள் (அறைகளை ஒதுக்குதல் வேலைகள், அலுமினியம் கதவுகள், ஜன்னல்களை உற்பத்தி செய்தல்)
 • சுவர்களுக்கான அலங்கார வேலைகள் மற்றும் வெட்டுதல், துளையிடல், சுற்றுதல் போன்ற பல்வேறு காய்ச்சியொட்டும் வேலைகளும்
 • இயந்திர சாதனங்களைப் பொருத்துதல்
 • இயந்திர சாதனங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை ஆற்றும் நடவடிக்கைகள்
 • இயந்திரசாதனங்களை புதுப்பித்தல், சேவிஸ் செய்தல்
 • மோட்டார் வாகனங்களைப் புதுப்பித்தல், சேவிஸ் செய்தல்
 • மின் இயந்திரசாதன வேலைகள்
 • மின் இணைப்பு மற்றும் புதுப்பித்தல்கள்
 • இலக்ட்ரோ பிளேட்டிங்க் வேலைகள்

முகவரி

அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம்                       

கொலன்னாவை

இலங்கை.