அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களமானது

அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களமானது 1849 ஆம் ஆண்டு அப்போதைய பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களினால் கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு அரசாங்க வேலைகள் திணைக்களத்தின், இயந்திர வேலைத்தளமாக தற்போது கொலன்னாவை வளவில் அரச மற்றும் தனியார் துறையின் சகல இயந்திரப் பொறியியல பணிகளையும் நிறைவேற்றுவதற்காக தாபிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு “ஏ” தரத்தைச் சேர்ந்த திணைக்களமொன்றாக அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம் மாற்றப்பட்டது.

தற்போது அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களத்தினால் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு நீர்; கட்டுப்பாட்டு கதவுகளை நிர்மாணித்தல், பொருத்துதல் மற்றும் பராமரிப்பு, தபால் திணைக்களத்தின் தினமுத்திரைகள் மற்றும் தினக் குற்றிகளை நிர்மாணித்து வழங்குதல், பொலிஸ் திணைக்களத்தின் இலக்கத் தகடுகள் மற்றும் சார்ஜன் பட்டிகளை உற்பத்தி செய்தல், தளபாடங்களை நிர்மாணித்து வழங்குதல், நீர் வழங்கல் சபையின் நீர் சுத்திகரிப்புத் தாங்கிகளை நிர்மாணித்தல், அரச வைபவங்களுக்கு வரவேற்பு மேடைகளை பொருத்துதல், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இரும்புப் பாலங்களை நிர்மாணித்துப் பொருத்தல், நிறுவனங்களின் அறைகளை பிரித்தல் டூயுடரஅinரைஅ Pயசவவைழைnரூ மற்றும் பெயர்ப் பலகைகளை நிர்மாணித்துப் பொருத்தல், அரச நிறுவனங்களின் வாகனங்களை சேர்விஸ் செய்தல் மற்றும் பராமரிப்புச் செய்தல், இலங்கை புகையிரத திணைக்கத்திற்கு சீனச்சிட்டி, பிறேக் கட்டமைப்பு உள்ளிட்ட சீனச்சட்டி உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து வழங்குதல், பலகை மற்றும் இரும்பாலான வைத்தியசாலை உபகரணங்களை நிர்மாணித்து வழங்குதல், பொய்லர் மற்றும் கேஸ் குழாய்க் கட்டமைப்புக்களைப் பராமரிப்புச் செய்தல், தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பொறியியலாளர்களுக்கு செயன்முறைப் பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது நிறுவனம் ஐளுழு 9001 கூ2015 தரச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டுள்ளது.

முகவரி 

அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களமானது
அரசாங்கத் தொழிற்சாலைத் திணைக்களம், கொலன்னாவ, இலங்கை
+94-11-2447432 ,+94-11-2447429
+94 11 2572254
info@govtfactory.gov.lk
 http://www.govtfactory.gov.lk