அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம்

அறிமுகம்

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் பேணிவரப்படுகினற் பகுதியளவிலான அரச நிறுவனமொன்றான இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் 12841 ஆம் இலக்க 1962 சனவரி 01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் அங்கீகாரத்தின் மூலம் தாபிக்கப்பட்ட நிறுவனமாகும்.

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் நிர்மாணத்துறையில் அரச துறையைச் சோ்ந்த முன்னோடி நிறுவனமொன்றாக உள்ளது. இதன் மூலம் நிர்மாண ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல், நிர்மாணிப்பு, பொறியியல் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல், நிர்மாண இயந்திரசாதனங்களைப் பெற்றுக் கொடுத்தல், கட்டிட வரைபடங்களைத் தயார் செய்தல், முன்வலுவூட்டப்பட்ட /முன்இணைக்கப்பட்ட கொன்க்றீட் அம்சங்களை உற்பத்தி செய்தல், பயிற்சி அளித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேலும், இக்கூட்டுத்தாபனம் 2009 ஆம் ஆண்டு முதல் ISO 9001:2000 தரச் சான்றிதழ் மற்றும் அண்மையில் ISO 14001: 2004 சுற்றாடல் முகாமைத்துவச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டு போட்டித்தன்மையுடன் அடுத்தகட்டப் பணிகளை மேற்கொண்டுவரும் நிர்மாணத்துறை நிருவனமொன்றாகும்.

 

நோக்கு

இலங்கையின் முன்னோடிப் பொறியியல் நிறுவனமாதல்

 

செயற்பணி

சுபிட்சமிக்கதொரு தொழில் முயற்சியில், போட்டித்தன்மையும், உற்சாகமும்மிக்க ஊழியப் படையின் பங்களிப்புடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஊடாக உதவியளிக்கின்ற மிகச் சிறந்த மதியுரைச் சேவைகள், உற்பத்தி மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ சேவைகளின் ஊடாக ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுப் பொறியியல்சார் தீர்வுகளைத் தயார் செய்து தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதாகும்.

முகவரி

இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம்

130, டபிள்யு.டி. ராமநாயக்க மாவத்தை, கொழும்பு 2, இலங்கை.
94-11-2447432 ,+94-11-2447429
94-11- 2 430061
info@secsl.lk
 http://www.secsl.lk

Social Chanel –

www.faceboo.com/
www.twiter.com/
www.intergram.com/
www.youtuebe.com /

 

Location