ஓஷன் வீவ் அபிவிருத்தி தனியார் கம்பனி (OVDC)

ஓஷன் வீவ் டிவலப்மன்ட் தனியார் கம்பனியானது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பங்கு மூலதனத்தைக் கொண்டதாக 1994 ஆம் ஆண்டு யூலை மாதம் 13 ஆம் திகதிய 1982/17ஆம் இலக்க சட்டத்தினால் தாபிக்கப்பட்டு 2007/7 ஆம் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு இலக்கம் Pஏ 17667 மூலம் மீளப் பதிவு செய்யப்பட்டது.
அரச கம்பனி என்ற வகையில் ஆதன அபிவிருத்தி மற்றும் ஆதன முகாமைத்துவத்தில் உச்சநிலைமை அடைந்துள்ள, அரச நிறுவனம் என்ற வகையில் நம்பகத்தன்மை, தனியார் கம்பனி என்ற வகையில் வினைத்திறனை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு துரிதமான, உயர் தரம்மிக்க, சேவையைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தனி வீடுகள் மற்றும் வீடமைப்புக் கருத்திட்டங்களை நிர்மாணித்து சந்தையில் போட்டித்தன்மை அடிப்படையில் நியாயமான விலைக்கு விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளது.

முகவரி

ஓஷன் வீவ் அபிவிருத்தி தனியார் கம்பனி
25 1/2  “Tower Building” ,
Bambalapitiya,
Colombo 04,
Sri lanka.
(94)-1120580340, (94)-112556583,
(94)-11-2507495
ovdc123@sltnet.lk