கட்டிடத் திணைக்களம்

அறிமுகம்

1849 ஆம் ஆண்டு அரசாங்க வேலைகள் திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்ட கட்டிடத் திணைக்களம், 1969 இல் ‘ஏ’ தொகுதியைச் சேர்ந்த திணைக்களமொன்றாக தாபிக்கப்பட்டதுடன், அரசாங்க வேலைகள் திணைக்களம் ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து அரசாங்கத்தின் கட்டிடங்கள் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் துறையில் அதிகாரம்கொண்ட ஒரே நிறுவனமாகவும், ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் கட்டிடத் திணைக்களம் கருதப்படுகின்றது.

 

நோக்கு

மக்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பாதுகாப்பான, சிக்கனமான, நிலையான மற்றும் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடச் சூழலை அரசதுறையின் நிறுவனங்களுக்குப் பெற்றுக் கொடுத்து கட்டிடத் தொழில்நுட்பத்துறையின் முன்னோடியாதல்.

 

செயற்பணி

தொழில்நுட்ப ரீதியாகப் பொறுப்புக்கூறல், தரமானதன்மை, சிக்கனம், உத்தேச பண்புகள் மற்றும் நிலைபேறானதன்மையை அடைந்துகொண்டு சேவைபெறுனரை பூரணமாக திருப்திப்படுத்துவதற்காக பல்வேறு தொழில்சார் திறமைகள் மற்றும் குறித்த பணிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற தொழில்சார் வல்லுனர்கள் ஊடாக கட்டிடக்கலை ரீதியான திட்டங்கள், பொறியியல் திட்டங்கள், நிர்மாணிப்பு, பராமரிப்பு நடவடிக்கைகள், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் அரசதுறையின் கட்டிட நிர்மாணிப்புப் பணிகளை மேம்படுத்துவதற்கான சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுத்தல்.

 

திணைக்களத்தின் பொறுப்புக்கள்

  • அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புக்களினுள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளுக்கு அமைய கட்டிடங்களின் மதிப்பீடுகள், நிர்மாணத் திட்டங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட வசதிகளைத் திட்டமிடல்.
  • கட்டிடத் திணைக்களத்தின் செலவுத் தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளுக்கு அமைய கட்டிடங்களின் மதிப்பீடுகள், நிர்மாணத் திட்டங்கள் மற்றும் அது சம்பந்தமான வசதிகளை திட்டமிடல்.
  • நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு மதியுரைச் சேவைகள் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவச் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல்.
  • அரசாங்க கட்டிடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்பு, மேலதிக அம்சங்களை இணைத்தல் மற்றும் மேம்படுத்தல்கள்.
  • அரசாங்க வைத்தியசாலைகளில் மலசல கழிவகற்றல் கட்டமைப்பின் பரமாரிப்பு மற்றும் வழிநடாத்தல் பணிகள் மற்றும் அவை முறையாக இயங்கிவருவதை உறுதி செய்துகொள்ளல்.
  • அரச வாசஸ்தளங்களை பராமரிப்புச் செய்வதும், பேணிவருவதும்.
  • திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சகல நிர்மாணப் பணிகளுக்கும் தொழில்நுட்ப வகைப்பொறுப்புக்கூறுவதை உறுதி செய்தல்.
  • வெளிநாட்டுத் தூதுக் குழுக்களின் கருத்திட்டங்களுக்கு பொறியியல்சார் பங்களிப்பைப் பெற்றுக் கொடுத்தல்.

முகவரி

கட்டிடத் திணைக்களம்

2 ஆம் மாடி,

“செத்சிறிபாய”

பத்தரமுல்லை,

இலங்கை.