கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படுகின்ற மிலேனியம் வார்ட் கட்டிடத் தொகுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடத்தை பார்வையிடல்.

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படுகின்ற மிலேனியலம் வார்ட் கட்டிடத் தொகுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஒரு சில தினங்களுக்குள் துரிதமாக பூர்த்தி செய்து Covid – 19 தொற்று நோய் காரணமாக நோய்வாய்ப்பட்டுள்ள மக்களுக்கு இடவசதிகளை செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த அவர்கள் தொிவித்தார்.

நாட்டில் நிலவும் Covid – 19 தொற்று நோய் நிலைமைக்கு மத்தியில் வைத்தியசாலைக் கட்டமைப்பை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வது நாட்டின் மிகப் பொிய தேவையாகும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் நிலவும் Covid – 19 தொற்று நோய் அச்சுறுத்தல் நிலைமையின் கீழ் சுகாதார ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்றி முறையான வேலைத்திட்டத்தின் கீழ் இதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் தொிவித்தார்.

அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டது, கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மிலேனியம் வார்ட் கட்டிடத் தொகுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடத்தை பார்வையிடும் நிகழ்வில் இன்று (03) கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலாகும்.

சுகாதார அமைச்சின் ரூ.மி. 743 ஆன நிதி ஏற்பாடுகளின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்தக் கட்டிடம் 07 சத்திரசிக்கைக் கூடங்கள், 05 ஆய்வுகூடங்கள், 02 வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் வார்ட் தொகுதியைக் கொண்டதாக 10 மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும்.

இதன் நிர்மாணப் பணிகள் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழுள்ள இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் ரத்னசிறி களுபஹன, அதன் உபதவிசாளர் பாக்ய ஜயதிலக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *