மிஹிந்து நிவஹானா” அனுராதபுர மாவட்டத்தில் திட்டத்தின் தொடக்க விழா

இந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துவைத்து, சங்கைக்குரிய புத்தன்னேகம அஸ்ஸஜி தேரரின் பெற்றோருக்கு அநுராரபுரம், சாலியபுர, புத்தன்னேகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய வீட்டுக்கு இதன் போது அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டதுடன், இந்தக் கருத்திட்டத்திற்கு அநுராதபுரம் மாவட்டத்திற்காக தொிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளான சங்கைக்குரிய தேரர்களின் பெற்றோர் 70 பேருக்கு வீடமைப்புக் கொடுப்பனவுக் காசோலைகளும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை ராமஞ்ஜ மஹா நிக்காய பிரிவின் வட மத்திய மாகாண பிரதம தலைமைத் தேரர் சங்கைக்குரிய பொதானே தம்மாநந்த தேரர், ரஜரட்டை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மிரிஸவெட்டிய ரஜமஹா விஹாரையின் வி         ஹாரகாதிகாரி சங்கைக்குரிய ஈதலவெட்டுனுவெவே ஞானாதிலக்க தேரர், ஜேதவனாராம ரஜமஹா விஹாரையின் விஹாரகாதிகாரி சங்கைக்குரிய ஹல்மில்லேவ ரதனபால தேரர், ஸ்ரீ சம்புத்த ஜயந்தி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய நுகேதென்னே பஞ்ஞநந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.

இந்த நிகழ்வுக்கு சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி, கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.பீ.எஸ். குமாரசிறி, வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்ஜித், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எச்.பி. சேமசிங்க, மத்திய நுவரகம்பளாத பிரதேச சபையின் தலைவர் பீ.பி.எம். ஜயசுந்தர, அநுராதபுரம் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சந்தியா அபேரத்ன, மத்திய நுவரகம்பளாத பிரதேச சபையின் செயலாளர் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன ஆகியோர் உட்பட பிரதேச அரசியல்வாதிகள், அரச அலுவலர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *