தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NHDA)

1979 இன் 17 ஆம் இலக்க “தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரச் சபை சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை யதார்த்தமாக்கும் நோக்கத்துடன் இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியும், வசதியும்மிக்கதொரு வீட்டில் வாழ்வதை உறுதி செய்வதற்கான வசதிகளை செய்துகொடுத்தல், ஊக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்றுவதற்காக “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நடுத்தர வருமானம் பெறுவோருக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய விலையில் வீடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக சியபத்த மற்றும் சபிரி வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. 2164 பேரைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பதவியணி உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் தற்போது உண்மையான பதவியணி சுமார் 2000 ஆக உள்ளதுடன், அதன் நடவடிக்கைகள் கொழும்பு 02 இல் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தாபிக்கப்பட்டுள்ள 25 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் கொழும்பு நகர அலுவலகங்கள் 02 இற்கு மேலதிகமாக 8 உப அலுவலகங்களின் ஊடாக அதன் சேவையை பொது மக்கள் மிக இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடியவாறு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.

National Housing Development Authority
Sir Chitampalam A Gardiner Mawatha,
P.O Box 1826,
Colombo 02,
Sri Lanka.
(+94)-11-2431932, 2431722,  2431707, 2421748
(+94)-11-2449622
info@nhda.lk
 http://www.nhda.lk