நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை

உள்நாட்டு ஒப்பந்தக் கைத்தொழில் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள்,
தொழில்வல்லுனர்கள், ஊழியப்படையணி போன்ற துறைகளின் அபிவிருத்தியை முன்னிட்டு
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை தாபிக்கப்பட்டுள்ளது. நிர்மாணக்
கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையானது முன்னோடி அம்சமொன்றாக
நிர்மாணத்துறையில் தாபிக்கப்பட்டுள்ளது.

எமது நோக்கு


“நம்பகத்தன்மை மற்றும் பூகோள போட்டித்தன்மைக்கு உகந்த நிர்மாணக் கைத்தொழிலை
இலங்கையில் உருவாக்குதல்”

எமது செயற்பணி


“ஒழுங்குவிதிகளை ஆக்குதல் மற்றும் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக முனைப்பான
தொழில்சார் மற்றும் நம்பகத்தன்மைமிக்க பெறுமதி சோ்க்கப்பட்ட சேவையை உறுதி செய்தல்,
நிர்மாணத் துறையின் வள அபிவிருத்தி மற்றும் தரநியமங்களை மேம்படுத்துவதன் மூலம்
உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைப்பாடுகளை முகம்கொடுக்கக்கூடிய நிலைபேறான தேசிய
அபிவிருத்தியை ஏற்படுத்தல்.”

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கங்கள்
 நிர்மாணக் கைத்தொழிலின் மேம்பாட்டுக்கான உபாயமுறைகளை சிபாரிசு செய்தல்
மற்றும் அவற்றை அமுல்படுத்த உதவுதல்.
 நிர்மாணக் கைத்தொழில் தொடர்பிலான ஒப்பந்ததாரர்களை பதிவு செய்தல் மற்றும்
தரப்படுத்தும் செயன்முறையை ஒழுங்குறுத்தல்.
 மதியுரையாளர்களின் தொழில்சார் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்புச்
செய்வது உட்பட அதற்குச் சமமான நிறுவனங்களை ஏற்படுத்த உதவுதல்.
 வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் நிர்மாணக்
கைத்தொழிலின் சேவைகளை ஏற்றுமதி செய்ய வசதிகள் செய்துகொடுத்தல்.
 நிர்மாணக் கைத்தொழில் தொடர்பிலான மதியுரைச் சேவைகளை ஆற்றுதல்.
 மனிதவளத் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களைப்
பெற்றுக் கொடுப்பதற்கு வசதி செய்தல்.
 நிர்மாணக் கைத்தொழிலின் தொழில்சார் மற்றும் சேவைத் துறைகளின் திறமைகள் மற்றும்
நிபுணத்துவத்தை மேம்படுத்த ஒத்தாசை வழங்குதல்.

 நிர்மாணக் கைத்தொழில் தொடர்பிலான துறைகளில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை
மேம்படுத்தல்.
 நிர்மாணக் கைத்தொழிலின் உற்பத்தித்திறன் மற்றும் தரச் சான்றிதழை மேம்படுத்தல்.
 நிர்மாணக் கைத்தொழில் தொடர்பிலான கைத்தொழில்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு
வழங்குவதும், உதவுவதும்.
 நிர்மாணக் கைத்தொழிலின் மேம்பாட்டுக்கான ஏனைய செயற்பாடுகளுக்கு உதவுதல்
அல்லது அவற்றை ஆரம்பித்தல்.

முகவரி

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை

“சவ்சிறிபாய” 123, விஜேராம மாவத்தை,
கொழும்பு – 07, இலங்கை.
94-11-2699801 (Hot Line)
94-11-2699738
info@cida.gov.lk
https://www.cida.gov.lk

Social Chanel –

www.faceboo.com/
www.twiter.com/
www.intergram.com/
www.youtuebe.com /