பின்னணி

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து புதிய அமைச்சுக்கள்  தாபிபட்டதுடன், 2158கூ41 ஆம் இலக்க 2020.01.17 ஆம் திகதிய வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சாக இந்த அமைச்சு செயற்பட்டு வந்தது.

இதனை அடுத்து, 2020 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதி தேர்தலின் பின்னர் அமைச்சுக்களின் விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டதுடன், 2020.08.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2187கூ27 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய இந்த அமைச்சு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு என தற்போது இயங்கிவருகின்றது. அதன் மூலம் அதுவரை அமுலில் இருந்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை விடயப்பரப்புக்கு மேலதிகமாக கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு விடயமும் இந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதற்கு மேலதிமாக 2020 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய அமைச்சரவை அமைச்சாகக் காணப்பட்ட புனர்வாழ்வு மற்றும் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பிரிவும் இந்த அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புதிய அரசின் கொள்கைப் பிரகடனமான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைச் சட்டகத்தை அமுல்படுத்தி “யாவருக்கும் வசதியானதொரு வீட்டைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை” அமுல்படுத்தும் பிரதான செயற்பணி இந்த அமைச்சுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமான் பெறுவோரின் வீடமைப்புச் சிக்கலுக்குத் தீர்வு காணும் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்” 2020 ஆம் ஆண்டில் புதிய அமைச்சு தாபிக்கப்பட்டதை அடுத்து ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமுல்படுத்த முடிந்தது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்கு ரூபா 600,000 ஆன உதவித் தொகை அரசின் கொடையாகவும் மற்றும் சமுதாயத்தின் பங்களிப்புடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் பயனாளிகள் குடும்பங்களினாலேயே வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் நாடு முழுவதிலும் 13,222 வீடுகளை நிர்மாணிப்பது ஆரம்பிக்கப்பட்டதுடன், இவற்றில் 4078 வீடுகளை பூர்த்தி செய்து பயனாளிகளை குடியமர்த்த இயலுமாயிற்று.

2021 ஆம் ஆண்டுக்கு அமைச்சுக்கு ரூ.மி. 17,202 ஆன அபிவிருத்தி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அப்போது நிலவிய கொவிட் 19 அபாய நிலைமைக்கு மத்தியில் இவற்றில் ரூ.மி. 12,955 ஆன தொகை செலவிடப்பட்டு 75.9ஸ ஆன முன்னேற்றம் அடையப்பெற்றுள்ளது. உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு 2021 ஆம் ஆண்டுக்கு அரசினால் ரூபா 06 இலட்சம் ஆன தொகையைப் பெற்றுக் கொடுக்க முடிந்ததுடன், 2022 ஆம் ஆண்டில் இந்த உதவித் தொகையை ரூபா 6.50 இலட்சமாக அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளது.

தமக்கென வீடொன்றை புதிதாக நிர்மாணித்துக் கொள்ளும் ஊக்கமும், ஆற்றலும்மிக்க மற்றும் தற்போது வீடமைப்பு நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதிச் சிக்கல்கள் காணப்படுகின்ற குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கடன் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு நகர மற்றும் பகுதியளவிலான நகர்ப்புறப் பிரதேசங்களில் நடுத்தர வருமானம் பெறுவோரின் வீடமைப்பச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 100 வீட்டு அலகுகள் வீதமான சியபத் தொடர்மாடி வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை முன்னெடுக்க இயலுமானதுடன், இதன் முதற் கட்டமாக 9 மாகாணங்களிலும் ஒவ்வொரு தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்திற்கான ஆரம்பகட்டமாக தற்போது மேல், சபரகமுவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் 03 தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிக்க முடிந்தது. நிர்மாணத் துறைக்குத் தேiவாயன பயிற்றப்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழில்வல்லுனர்களின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்காக நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பல்வேறு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் கோட்பாடுசார் மற்றும் செயன்முறை ஆகிய இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் „சயனி‟ நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டில் கலைஞர்கள் 1000 பேரை  பயிற்றுவிக்க எதிர்பார்க்கப்பட்ட போதிலும் சுகாதார நிலைமை காரணமாக  பயிற்சி வழங்க முடிந்திருப்பது சிறிய எண்ணிக்கையிலானோருக்காகும்.

சிரம சிக்குரு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நிர்மாணத்துறைக்குத் தேவையான முழுமையான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட பயிற்றப்பட்ட ஊழியர்கள் உருவாக்கப்படுவதுடன், 2021 ஆம் ஆண்டில் இதன் மூலம் 2003 பேர் பயிற்சிகளை நிறைவு செய்து நிர்மாண வேலைத்தளங்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.தேசிய கொள்கைச் சட்டகத்திற்குள் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை அடைந்துகொள்வதில் அரச துறைக்கு உரித்தான நியாயாதிக்க நிறுவனங்கள் திறைசேரிக்குச் சுமையாக அமையாதவாறு தமது சுயநிலைத்திருத்தலை உறுதி செய்துகொள்வதற்கு கடந்த இரண்டு வருடங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதன் பெறுபேறாக இலங்கை கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், தேசிய இயந்திரசாதன நிறுவனம் போன்ற நிறுவனங்கள் புதிய வர்த்தகத் திட்டங்களை அமுல்படுத்தியதன் மூலம் திறைசேரிக்குச் சுமையாக இருக்காது தமது சுய நிலைத்திருத்தலை உறுதி செய்துகொண்டுள்ளதுடன், அரச பொறியியல் கூட்டுத்தாபனமும் மிகவும் காத்திரமான முறையில் தமது நிலைத்திருத்தலை நிலைபேறானதாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்காக அமுல்படுத்தப்பட்ட மீள்குடியேற்றும் பிரிவும், இந்த அமைச்சுடன் இணைக்கப்பட்டதை அடுத்து அமைச்சின் விடயப்பரப்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றப் பிரிவானது 2020.08.09 ஆம் திகதிய 2187கூ27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய இந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. மீள்குடியேற்றப் பிரிவினால் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய யுத்த சூழல் காரணமாக இடம்பெயந்திருந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும், ஒழுங்கு செய்வதும், ஒருங்கிணைப்புச் செய்வதும் மேற்கொள்ளப்படுகின்றது. அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களாவன,

  • தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை
  • ஓசன் வீவ் அபிவிருத்தி (தனியார்) கம்பனி
  • நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்பு வசதிகள் அபிவிருத்தி துரித நிகழ்ச்சித்திட்டம்
  • கட்டிடத் திணைக்களம்
  • அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம்
  • நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை
  • அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம்
  • தேசிய இயந்திரசாதன நிறுவகம்
  • வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்