பின்னணி

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, 2187/27 ஆம் இலக்க 2020.08.09 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையத் தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் விடயப்பொறுப்பு அமைச்சராக 2188/43 ஆம் இலக்க 2020.08.13 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்திக அனுருந்த அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைச்சு பத்தரமுல்லை, செத்சிறிபாய நிருவாகக் கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் தாபிக்கப்பட்டுள்ளது. சுமார் 194 பேரை பதவியணியாகக் கொண்டுள்ள இந்த அமைச்சு, அமைச்சுச் செயலாளரின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் வீடமைப்பு, கட்டிடப் பொருட்கள் மற்றும் நிர்மாணத்துறையில் குறிப்பிடத்தக்க செயற்பணியை நிறைவேற்றி வருகின்றது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் விடயப்பரப்புக்கு உரித்தான அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 8 ஆகும். அவற்றில் அரச திணைக்களங்கள் 2 மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள்/அதிகாரசபைகள் போன்ற நியாயாதிக்க நிறுவனங்கள் 6 உரித்தாகின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் பின்வருமாறாகும்.

 • அரசாங்க தொழில்சாலைகள் திணைக்களம்
 • கட்டிடத் திணைக்களம்
 • தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை
 • இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம்
 • நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை
 • தேசிய இயந்திரசாதன நிறுவகம்
 • வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
 • ஓசன் வீவ் டிவலப்மன்ட் (தனியார்) கம்பனி

இந்த அமைச்சினால் பிரதானமாக குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் விசேட சமுதாயக் குழுக்கள் உட்பட பொது மக்களின் வீடமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வீடமைப்பு நிதி உதவி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல், வீடுகளை நிர்மாணிக்கும் தொழில்நுட்ப முறைகள் பற்றி கிராமிய மக்களுக்கு வழிகாட்டல், வீடமைப்புமயமாக்கல் தொடர்பிலான அரச கொள்கைகளை தயார் செய்தல் போன்ற வீடமைப்புத் துறையின் முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதுடன், நிர்மாண மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழிலுக்கு மதியுரைச் சேவைகளை ஆற்றுதல், நிர்மாணத் துறையின் நடவடிக்கைகளை ஒழுங்குறுத்தல்  மற்றும் அரச நிறுவனங்களுக்கு பொறியியல் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற நிர்மாணத்துறையின் முன்னேற்றத்திற்கான பிரதான நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.

 • அமைச்சு தாபிக்கப்பட்ட 2187/27 ஆம் இலக்க 2020.08.09 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.
 Sinhala   English   Tamil
 • அமைச்சின் விடயப்பொறுப்பு அமைச்சர் நியமனம் செய்யப்பட்ட 2188/43 ஆம் இலக்க 2020.08.13 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

   

Sinhala   English   Tamil