புத்தசாசனத்திற்கு தமது பிள்ளைகளை அர்ப்பணிப்புச் செய்துள்ள பெற்றோரைப் பாராட்டும் வகையில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள “மிகிந்து நிவஹன”

“மிகிந்து நிவகஹ” நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் வகையில் சங்கைக்குரிய கங்கொடகம சுமுதித தேரரின் பெற்றோருக்கென மாத்தறை, ஹக்மனை, நாரத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

 

இக்கருத்திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் தொிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளான பிக்குமாரின் பெற்றோர் 63 பேருக்கு வீடமைப்புக் கொடை காசோலைகளை வழங்கிவைப்பதும் இதன் போது இடம்பெற்றது.

இதன் முதற் கட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 2,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூபா 12,000 இலட்சமாகும். வீடமைப்பு விடயப்பொறுப்பு அமைச்சரும், கௌரவ பிரதம அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் போில், புத்தசாசன அமைச்சுடன் இணைந்து கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு “மிகிந்து நிவஹன” வீடமைப்புக் கருத்திட்டத்தை அமுல்படுத்துகின்றது.

இந்த நிகழ்வின் போது, அழங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள், அரசாங்க அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *