அமைச்சின் செயலாளர்

 

பொறியியலாளர் கீர்த்தி ரஞ்ஜித் அபேசிறிவர்த்தன

இராஜாங்க செயலாளர்
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு


2 ஆம் மாடி“செத்சிறிபாய”,பத்தரமுல்லை,இலங்கை.


(+94) 11-2862225
(+94) 11- 2864765
 secretary@houseconmin.gov.lk

Social Chanel –

www.faceboo.com/
www.twiter.com/

 

இலங்கையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை தொடர்பிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கும் பிரதானமானதொரு அமைச்சான கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சை அறிமுகம் செய்ய முடியும். நாட்டின் சகல கிராமிய குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடமைப்புக் சிக்கல்களுக்கு முனைப்புடன் தீர்வு பெற்றுக் கொடுத்தல், நிலைபேறான நிர்மாண மற்றும் கட்டிடப் பொருள் துறையின் நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்கதாக்குவது எமது அமைச்சின் பிரதான நோக்கமாகும்.

மக்களின் தேவைகளுக்குப் பதிலளிப்பதற்காக எமது அமைச்சின் கீழ் 9 சட்டவாக்க நிறுவனங்கள் காணப்படுவதுடன், இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் பிரிவும் எமது அமைச்சுடன் புதிதாக இணைந்துள்ளது. மீளக் குடியமர்த்தும் பிரிவினூடாக யுத்தத்தினால் அல்லது வேறு காரணங்களினால் இடம்பெயந்துள்ள இலங்கையர்களுக்கு வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு விசேட முன்னுரிமை வழங்கப்படுகின்றது. மேலும், அமைச்சின் கீழ் காணப்படுகின்ற முக்கியமான நிறுவனமொன்றான வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது, கிராமிய மற்றும் நகர்ப்புற மக்களின் வீடமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக செயற்படுத்துகின்ற பல்வேறு வீடமைப்பு நிர்மாண நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குறுத்தல் மற்றும் நேரடியாகவே அவற்றை கண்காணிப்புச் செய்வதை முன்னுரிமைப்படுத்திக் கொண்டுள்ள நிறுவனமாகும். இந்த அமைச்சுக்கு உரித்தானதாகக் காணப்படுகின்ற ஏனைய நிறுவனங்கள் நேரடியாகவே நிர்மாண மற்றும் கட்டிடத்துறைகளுடன் சம்பந்தப்பட்டதாக செயற்பட்டு வருகின்றன.

மேன்மைதங்கிய சனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களின் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைக்கு அமைவாக செயற்பட்டு கௌரவ பிரதம அமைச்சரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனை மற்றும் மதியுரையின் கீழ் எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினுள் வீடமைப்புத் துறையில் மேற்கொள்ளப்படுகின்ற சகல அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் எமது அமைச்சின் வழிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய கிராமிய மக்களின் வீடமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வருடாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கத் தேவையான கொள்கைகள் மற்றும் திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன.

அதன் கீழ்,

  • ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச வீடுகள்
  • சபிறி வீடமைப்புக் கடன் திட்டம்
  • சபிறி தொடர்மாடி வீடமைப்புத் திட்டம்
  • ஒவ்வொரு தோ்தல் தொகுதியிலும் வருடாந்தம் 100 வீடுகளை நிர்மாணித்தல்
  • இளம் விவாகமானவர்களுக்கு வங்கிக் கடன் சகிதம் வட்டி அடிப்படையில் 30 வருடங்களில் திருப்பிச் செலுத்துவதற்கு உட்பட்டு நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்புத் திட்டம்
  • நடுத்தர வருமானம் பெறுவோருக்கு தவணை அடிப்படையில் செலுத்தும் முறையில் வீடுகளைப் பெற்றுக் கொடுத்தல்
  • இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு வீடுகளை இலவசமாக நிர்மாணித்துக் கொடுத்தல்.

இந்த அமைச்சின் மேற்படி நோக்கங்களை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக அமைச்சிலும், அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களிலும் திறமையும், அனுபவமும், அறிவும் மிக்க பெரும் எண்ணிக்கையான அலுவலர்கள் சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மற்றும் கௌரவ இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த அவர்களின்  ஆலோசனையின் போில் அடுத்துவரும் 5 வருடங்களில் அமைச்சினால் மக்களுக்கு வினைத்திறனும், விளைதிறனும் மிக்க சேவையைப் பெற்றுக் கொடுப்பதும் இலங்கையில் யாவருக்கும் வீடு மற்றும் நிலைபேறான நிர்மாணிப்பு எனும் நோக்கை அடைந்துகொள்ளத் தேவையான நடவடிக்கைகளை கொள்கைகளை மதித்து செயற்படுகின்ற அரச அலுவலர் என்ற வயைில் கட்டுப்பட்டு நிறைவேற்றுவது எனது நோக்கமாகும்.

மேலும், நான் இலங்கைப் பிரசை என்ற வகையில் இலவசக் கல்வித் திட்டதினூடாக கல்வி பயின்ற பட்டயம்  பொறியியலாளர் என்ற வகையில்  இந்நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்து சம்பளம் பெறுகின்ற அரசாங்க ஊழியராக மக்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும், கடமைக்கும் முன்னுரிமை வழங்கி மக்களின் சிக்கல்களுக்குத் துரித தீர்வு பெற்றுக் கொடுப்பது எனது முதலாவதும், கட்டாயமானதுமான பொறுப்பாகும். இதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கு, அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களுடன் நட்புறவுடன் செயற்படுவதற்கும், தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொளவதற்கும் நான் பொறுப்புடன் செயற்படுவேன். தனியார்துறை மற்றும் அரச துறையில் 28 வருட தொழில்சார் அனுபவத்தைப் பெற்றுள்ள மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் இன்றி மக்களின் அபிலாசைகளை முன்னிலைப்படுத்தி அரசாங்க ஊழியர் என்ற வகையில் கிராமிய வீடமைப்பு அமைச்சின் செயலாளராக செயற்படும் போது எனக்கு மேன்மைதங்கிய சனாதிபதி அவர்களிடமிருந்தும், கௌரவ பிரதம அமைச்சரிடமிருந்தும், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு கௌரவ இராஜாங்க அமைச்சரிடமிருந்தும் உச்சளவில் வழிகாட்டலும், ஆலோசனையும் கிடைக்கின்றது. இது தொடர்பில் நான் பெருமைப்படுவதுடன் இதனை மிக்க உயர்வாக மதிக்கின்றேன்.

தொழில்சார் அனுபவங்கள் நிறைந்த சிரேஷ்ட அலுவலரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பதவியை வகிக்கின்ற திரு சிறிநிமல பெரேரா அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையும் மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குகின்ற அமைச்சு என்ற வகையில் இதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றேன்.

மக்களின் தேவைகளைப் பிரதானப்படுத்திக் கொண்டு அவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்கும் வகையிலான எமது பயணத்தின் போது அமைச்சின் பதவிநிலை அலுவலர்கள் உள்ளடங்களாக ஏனைய சகல அலுவலர்களும் எனக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தொிவித்துக் கொள்கின்றேன்.

இதற்கு மேலதிகமாக எமது அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களில் சேவையாற்றி வருகின்ற சகல அலுவலர்களுக்கும் நல்வாழ்த்துத் தொிவிப்பதுடன், எமது அமைச்சின் முன்னேற்றப் பயணத்திற்குத் தேவையான ஒத்துழைப்பை உச்சளவில் பெற்றுத் தருவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன்.