வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்

 

அறிமுகம்

1970 இன் 30 ஆம் இலக்க இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் 1971 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இதனை அடுத்து 1987 இன் 23 ஆம் இலக்க “அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசுக்கு உரித்தான வர்த்தக நிறுவனங்களைப் பொதுக் கம்பனிகளாக மாற்றியமைக்கும் சட்டத்தின்” கீழ் 1992 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் கம்பனிகள் சட்டத்தினால் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களைக் கொண்ட பொதுக் கம்பனியாக கூட்டுத்தாபனம் மாற்றியமைக்கப்பட்டது.

நோக்கு

வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுக்கும் துறைக்குத் தேவையான கட்டிடப் பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னோடியாதல் மற்றும் அரச நிறுவனம் என்ற வகையில் சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றி இலங்கைச் சமுதாயத்தினுள் உச்சளவான நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல்.

செயற்பணி

தரமான கட்டிடப் பொருட்கள் மற்றும் நிர்மாண உபகரணங்களை போட்டித்தன்மைமிக்க விலையில் நாடு முழுவதிலும் பெற்றுக் கொடுத்தல்.

நிறுவனத்தின் நோக்கங்கள்

  • அரச மற்றும் தனியார் துறையில் கட்டிடங்கள் மற்றும் நிர்மாணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டிடப் பொருட்களின் தேவைகளை மதிப்பீடு செய்தல்.
  • கட்டிடப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதன் மூலங்களை இனங்காணல் மற்றும் அரச, தனியார் துறைக்கு தொடர்ச்சியாக கட்டிடப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்தல்.
  • சுண்ணாம்பு, மணல், கப்புக்கல், பலகை, செங்கல் போன்ற கட்டிடப் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறிய உற்பத்தியாளர்களுக்கு அவசியப்படக்கூடிய உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
  • கட்டிட நிர்மாணக் கைத்தொழிலுக்குத் தேவையான இயந்திரசாதனங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்.
  • நாடு முழுவதிலும் கட்டிடப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்தல் மற்றும் சில்லறை வியாபாரத்தை மேற்கொள்ளல்.
  • சகல அரசதுறை நிறுவனங்களுக்குமான விநியோக மற்றும் கொள்வனவு செய்யும் முகராக செயற்படுதல்.
  • மேற்படி நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான ஆராய்ச்சிப் பிரிவைத் தாபித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 

முகவரி

வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்

486, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு.

இலங்கை