தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது பொலன்னறுவையில் இருந்து வீட்டுக்கடன்கள், உதவிகள் மற்றும் வீட்டு உரிமைப் உறுதிப்பத்திரங்களை வழங்க ஆரம்பித்தல்…
- தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது பொலன்னறுவையில் இருந்து வீட்டுக்கடன்கள், உதவிகள் மற்றும் வீட்டு உரிமைப் உறுதிப்பத்திரங்களை வழங்க ஆரம்பித்தல்…
- இந்த ஆண்டு 2,000 வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம்…
326 பயனாளிகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு பொலன்னறுவை ஹிகுரக்கொட தாருகா மண்டப கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
இங்கு ஹிகுரக்கொட பிரதேச செயலகத்தினால் 197 பயனாளிகளுக்கு காணி உரிமங்களும் 43 பயனாளிகளுக்கு காணி ஒதுக்கீடு பத்திரங்களும் வழங்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பொலன்னறுவை சி.ஐ.சி. வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 86 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் உறுதிப் பத்திரங்களும், 12 பயனாளிகளுக்கு ” உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைபுத் திட்டத்தின் கீழ் 2.3 மில்லியன் ரூபா பெறுமதியில் வீட்டுதவிகளும் வழங்கப்பட்டன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மாவட்ட மட்டத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீடமைப்பு உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. முதலாவது பொலன்னறுவையில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது தற்போது தோட்டப்புற வீடுகள், கிராமிய மற்றும் நகர்ப்புற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு பல்வேறு வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ” “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை” வீடமைப்புத் திட்டம் மற்றும் “மிஹிது நிவஹன” வீடமைப்புத் திட்டம் ஆகியவை அவற்றுள் பிரதானமானவை.
அத்துடன், கடந்த வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இடையில் நாடளாவிய ரீதியில் 1,890 வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் சமரவிக்ரம, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, அதன் உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, பொலன்னறுவை மேலதிக மாவட்ட ஆணையாளர் ஆர்.எம்.கே.ஆர்.பி. ரத்நாயக்க, ஹிகுராக்கொட பிரதேச செயலாளர் ஹர்ஷ பண்டார, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் சமிந்த தென்னகோன் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.