நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA)
2014 இன் 33 ஆம் இலக்க நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இந்த அதிகாரசபை தாபிக்கப்பட்டது. நிர்மாணக் கைத்தொழில் துறையின் நடவடிக்கைகளை ஒழுங்குறுத்தல், பதிவுசெய்தல், முறைப்படுத்தல் மற்றும் தரப்படுத்துவது இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். நிர்மாணக் கைத்தொழிலுக்கான தேசிய மதியுரை சபையைத் தாபித்தல், நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல், நிர்மாணக் கைத்தொழில் சம்பந்தமான தொழில் வல்லுநர்கள், உற்பத்தியாளர்கள், வழங்குநர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கலைஞர்களின் அபிவிருத்தி மற்றும் நலன்புரிக்கான ஏற்பாடுகளைச் செய்தல், நிர்மாண நடவடிக்கைகள் சம்பந்தமான பிணக்குகளைத் தீர்த்துவைத்தல், நிர்மாணக் கைத்தொழில் துறையில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்தல் போன்ற பணிகளுக்காக அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
முகவரி
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை
“Savsiripaya”
123, Wijerama Mawatha ,
Colombo 07. Sri Lanka.
94-11-2699801 (Hot Line)
94-11-2699738
cida@sltnet.lk
http://www.cida.lk