Uncategorized

உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி பெறாமல், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடங்கியுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க, அமைச்சர் பிரசன்ன அதிகாரிகளுக்கு உத்தரவு…

  • உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி பெறாமல், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடங்கியுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க, அமைச்சர் பிரசன்ன அதிகாரிகளுக்கு உத்தரவு…
  • உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி பெறாமல் திட்டங்களைத் தொடங்குவதால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன
  • இனிமேல் திட்டங்களைத் தொடங்கும் போது சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி பெறுவது கட்டாயம்
  • அதிகாரிகளின் பலவீனத்தால் நிறுவனங்களை சீரழிக்க ுடியாது…

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

 

உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி பெறாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆராய்ந்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்  என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் ஆலோசனைத் தெரிவுக் குழுவில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

உள்ளூராட்சி நிறுவனங்களிடம் அனுமதி பெறாமல் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் செயற்திட்டங்களை ஆரம்பிக்கும் போது உரிய உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதியைப் பெறுவது கட்டாயம் என அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனை தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, தெனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.